மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் ஓய்ந்தது...

News image

பாரதிராஜா - கோப்புப்படம்

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

இயக்குநர் இமயம் எனப் போற்றப்பட்ட பாரதிராஜா (வயது 84) இன்று (ஜூன் 10) காலை உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ், கடந்தாண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார். அதன்பிறகு, பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். பின்னர், சென்னை நீலாங்கரை இல்லத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலக கலைஞர்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவரது இல்லத்துக்கு அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.

இயக்குநர் இமயம்

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே தனக்கான தடத்தை திரையுலகில் படைத்தார்.

கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா என கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி அசத்தினார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களையும் இயக்கி, 40 ஆண்டுகளுக்கு முன்பே பான் இந்தியா இயக்குநராக வலம்வந்தார்.

ஹிந்தியில் 16 வயதினிலே படத்தை சோல்வா சாவன், சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரெட் ரோஸ், அலைகள் ஓய்வதில்லை படத்தை லவர்ஸ், கிழக்கே போகும் ரயில் படத்தை சவேரே வாலி காடி என அவரே ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார்.

தெக்கத்திப் பொண்ணு உள்ளிட்ட சில தொலைக்காட்சித் தொடர்களையும் பாரதிராஜா இயக்கியுள்ளார்.

நடிகர்கள் கார்த்திக், நிழல்கள் ரவி, நடிகைகள் ராதிகா, ரேவதி, ராதா எனச் சிறந்த நடிகை, நடிகர்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

கடைசியாக 2020 ஆம் ஆண்டும் மீண்டும் ஒரு மாரியாதை படத்தை அவரே தயாரித்து இயக்கினார். மேலும், ஒளிப்பதிவும் செய்திருந்தார்.

பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த பாரதிராஜா, 2000-க்கு பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ஆயுத எழுத்து, ரெட்டை சுழி, பாண்டியநாடு, கென்னடி கிளப், நம்ம வீட்டு பிள்ளை, திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக மலையாளத்தில் வெளியான துடரும் திரைப்படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்திருந்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு, நாட்டின் நான்காவது உயரிய விருதான ’பத்ம ஸ்ரீ’ பாரதிராஜாவுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 6 முறையும், மாநில விருதை 6 முறையும் வென்றுள்ளார். மேலும், நூற்றுக்கணக்கான விருதுகளை வென்று குவித்துள்ளார்.

Summary

My dear Tamil people - Bharathiraja passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.