நடிகர் வசந்த் ரவி ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்துள்ளது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாள்களுக்கும் மேல் கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
ரஜினியுடன் பல நட்சத்திர நடிகர்களும் இணைந்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் இந்தியளவில் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்த புகைப்படங்களை வெளியிட்டதில் அதில் ஜெயிலர் முதல் பாகத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த வசந்த் ரவியும் இடம்பெற்றிருந்தார். ஜெயிலரில் அவரை ரஜினியே சுட்டுக்கொல்வது போல் எடுக்கப்பட்டிருந்தது. தற்போது, இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளது ரசிகர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனால், இரண்டாம் பாகத்தில் பிளாஷ்பேக்-ல் வசந்த் ரவிக்கான காட்சி இடம்பெறலாம் என்றும் தெரிகிறது. அதனாலேயே இவ்வளவு நாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இறுதிக்கட்டத்தில் அவருக்கான காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ. 160 கோடிக்குப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
Actor Vasanth Ravi's role in the film Jailer 2 has sparked considerable interest
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு

தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள்: வசந்த் ரவி

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாட்டம்!

ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் - 2 ஓடிடி உரிமத் தொகை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

