இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' மிகப்பெரிய ஹிட் அடித்து அவரை தென்னிந்தியளவில் பிரபலப்படுத்தியது. இப்படம் மூலமே நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி ஆகியோருக்கு பெரிய வாய்ப்புகளும் அமைந்தன.
தொடர்ந்து, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இயக்குநர் பணியில் கவனம் செலுத்தினாலும் தற்போது அல்போன்ஸ் புத்திரன் நடிகராகவும் நடித்து வருகிறார். இறுதியாக, நிவினுடன் சர்வம் மாயா, வாழ 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேமம் கூட்டணி மீண்டும் இணையவுள்ள தகவல் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
Summary
Reports indicate that actor Nivin Pauly is set to star in a film directed by Alphonse Puthren.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ்?

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

