விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோசா கிங் மசாலா அண்ட் மர்டர்ஸ்... திரைப்படமாகும் சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கு!

த. செ. ஞானவேல் இயக்கத்தில் சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கு...

News image

இயக்குநர் த. செ. ஞானவேல், ராஜகோபால், ஜீவஜோதி.

Updated On :10 செப்டம்பர் 2024, 1:25 pm IST

இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் சரவண பவன் ராஜகோபால் வழக்கு திரைப்படமாகிறது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு தனது புதிய படத்தை ஞானவேல் இயக்கவிருக்கிறார். 

சரவண பவன் என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வந்த ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி கொலை செய்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது. 

இந்த வழக்கு நடைபெற்றபோது பத்திரிகையாளராக இருந்த த. செ. ஞானவேல் இந்த வழக்கை புதிய கோணத்திலிருந்து திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், இதற்கு, ’தோசா கிங் மசாலா அண்ட் மர்டர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்.

ஹிந்தியில் உருவாகும் இந்தப் படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுடப் கலைஞர்களின் விவரங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது, ஞானவேல் வேட்டையன் வெளியீட்டு பணிகளில் இருக்கிறார். இது முடிந்ததும், தன் அடுத்த படமாக தோசா கிங் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.