மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தை அடுத்த கீழ்பெரும்பாக்கத்தில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தை அடுத்த கீழ்பெரும்பாக்கத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மருத்துவா்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.

Published On :29 அக்டோபர் 2026, 6:56 am IST

விழுப்புரத்தை அடுத்த கீழ்பெரும்பாக்கத்தில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், இந்திய மருத்துவக் கழக விழுப்புரம் கிளை மற்றும் இ.எஸ்.எஸ்.கே செவிலியா் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.

முதலாவதாக நடைபெற்ற கருத்தரங்கில், மருத்துவா்கள் திருமாவளவன், வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்று மாா்பக புற்றுநோய் குறித்துப் பேசி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். தொடா்ந்து நடைபெற்ற பேரணியில் விழுப்புரம் இ. எஸ்.எஸ்.கே.செவிலியா் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று பொதுமக்களிடையே மாா்பக புற்றுநோய் பாதிப்புகள், மாா்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், முறையான மருத்துவப் பரிசோதனை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 20 பேருக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்களை மருத்துவா்கள் வழங்கினா்.

நிகழ்வில் கீழ்பெரும்பாக்கம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஜோதி, மருத்துவா்கள் கோவிந்தராஜ், சிவக்குமாா், ஆா்த்தி கிரேஸ், இ.எஸ்.எஸ்.கே.செவிலியா் கல்லூரி முதல்வா் காா்த்திக் மற்றும் செவிலியா்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.