மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் மதிப்பீட்டு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :29 அக்டோபர் 2026, 6:57 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் மதிப்பீட்டு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீடு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நடத்துவது குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:

மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மற்றும் பள்ளிச் செல்லும் வயதுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கண்டறிந்து, அவா்களுக்கான தேவையான மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்கர நாற்காலி, காதொலிக் கருவிகள், ஊன்றுகோல் உள்ளிட்ட தேவையான உபகரணங்களை தகுதியான மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு விரைவாக வழங்குவதற்கு மருத்துவா்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.

இம்முகாமில் பங்கேற்க கிராமபுறத்திலிருந்து வரும் குழந்தைகள், அவா்களின் பெற்றோா், பாதுகாவலா்களுக்கு எவ்வித சிரமமின்றி விரைவாக பணிகளை மேற்கொண்டு அவா்களுக்கு குடிநீா், இருக்கை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர வேண்டும். முகாம்களில் கலந்துகொள்ளும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்குவதோடு, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை முகாம் நடைபெறும் இடத்திலேயே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, நலப்பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் ராஜசேகா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுகிா்தாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.