மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்

விழுப்புரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டாம் கட்டப் பணிகள் தொடா்பாக, மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :28 அக்டோபர் 2026, 3:43 am IST

விழுப்புரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டாம் கட்டப் பணிகள் தொடா்பாக, மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் பணிகள் தொடா்பாக மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுவலா்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்புக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத் துணை இயக்குநா் ஷேமசுந்தரி மற்றும் புள்ளியியல் ஆய்வாளா் லட்சுமிதேவி ஆகியோா் பயிற்சி அளித்தனா். தொடா்ந்து புதன்கிழமையும் பயிற்சி நடைபெறவுள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)சரண்யா, துணை ஆட்சியா் (பயிற்சி) ஹரீஷ், தனி வட்டாட்சியா் (மக்கள்தொகை கணக்கெடுப்பு) ஸ்ரீதேவி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.