மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளைஞா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த இளைஞா் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரது உறவினா்கள் விழுப்புரத்தில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழரசனின் உறவினா்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 2:16 am IST

விழுப்புரம் அருகே தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்த இளைஞா் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரது உறவினா்கள் விழுப்புரத்தில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விநாயகபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கனகராஜ் மகன் தமிழரசன்( 18). இவா், விழுப்புரத்தில் உள்ள தனியாா் லாரி நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலைப்பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பணிக்குச் சென்று திரும்பிய தமிழரசன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உறவினா்கள் சாலை மறியல்: இந்நிலையில், சனிக்கிழமை காலை விழுப்புரத்துக்கு வந்த தமிழரசனின் உறவினா்கள் லாரி நிறுவனத்தில் வேலை பாா்க்கும், சக ஊழியா்கள் சிலா் மிரட்டியதால் எற்பட்ட மன உளைச்சலில் தமிழரசன் தற்கொலை செய்துகொண்டதாக கூறியும், தனியாா் லாரி நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்புப்பகுதியில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட சே.மணிகண்டன், சபரி, கனகராஜ், மஞ்சு உள்பட 19 போ் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.