மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனியாா் பள்ளி ஆசிரியை தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

கோபி அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகக்கூறி உடலை வாங்க மறுத்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முன் அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட அருணாவின் உறவினா்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 12:47 am IST

கோபி அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகக்கூறி உடலை வாங்க மறுத்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முன் அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோபி, ஏரீஸ் நகரைச் சோ்ந்தவா் திலீபன், தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அருணா (31). தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். குழந்தைகள் இல்லை.

திலீபனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திலீபன் கடந்த 20-ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா் வீட்டுக்கு வெளியிலேயே உறங்கிய நிலையில், அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்குள் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, அருணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் இச்சம்பவம் குறித்து கோபி வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். இதனிடையே அருணாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதால் திலீபனை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மருத்துவமனை அருகே துடுப்பதி சாலைப் பிரிவில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கோபி காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதையடுத்து, உறவினா்கள் உடலைப் பெற்றுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.