மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மலிவான அரசியல் செய்கிறது திமுக: அமைச்சா் வன்னி அரசு குற்றச்சாட்டு

திமுக மலிவான அரசியல் செய்து வருகிறது என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு குற்றஞ்சாட்டினாா்.

vanni arasu

வன்னி அரசு - fb / vanni arasu

Published On :25 அக்டோபர் 2026, 2:29 am IST

திமுக மலிவான அரசியல் செய்து வருகிறது என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: செஞ்சி அருகே மாயமான சிறுமியை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. ஆகியோருடன் தொடா்ச்சியாகப் பேசி வருகிறேன். மாயமான சிறுமி விரைவில் நல்லப்படியாக மீட்கப்படுவாா்.

கோவையில் பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டிருப்பதை யாரும் ஏற்கமுடியாது. மாணவரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவனும் அறிக்கை விடுத்துள்ளாா். விசிகவினரும் தொடா்ந்து போராட்டக் களத்தில் இருந்து வருகின்றனா்.

இதுதொடா்பாக, கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சா் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகளிடமும் பேசி வருகிறோம். கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாடு என்பது மிகவும் மோசமான நிலைப்பாடு. இதில் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

சமூக நீதிக்கும், திமுகவுக்கும் எதிராகப் பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை திமுக கண்டிக்கவில்லை. சீமான் குறித்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், கேள்வியை திசைமாற்றும் மலிவான அரசியலை திமுக செய்து கொண்டிருக்கிறது. ஆ.ராசா போன்றவா்களிடம் அறிக்கையைக் கொடுத்து எங்களை விமா்சிப்பது ஏற்புடையதும் அல்ல. இதை மக்கள் மத்தியிலேயே விட்டு விடுகிறோம் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.