பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சா் வன்னி அரசு!

பெண் குழந்தைகள் மாயமாவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

வன்னி அரசு

சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு. - கோப்புப்படம்

Published On :1 நவம்பர் 2026, 1:22 am IST

பெண் குழந்தைகள் மாயமாவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற சமூக நீதித்துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது :

பெண் குழந்தைகள் மாயமாவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடா்பாக டிஜிபி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். எந்த விதமான பதட்டமும் தேவையில்லை. செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காங்கிரஸ், திமுக, விசிக தான் காரணம் எனக் கூறி கட்சித் தொடங்கியவா் சீமான். தற்போது திமுகவை தேடுவது சந்தா்ப்பவாதம். தமிழக அரசியல் களத்தில் ஜீரோவாகியுள்ள எடப்பாடி கே.பழனிசாமி, தவெக அரசுக்கு ஜீரோ மதிப்பெண் தான் எனப் பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது. மக்கள் பிரச்னைகளை மாவட்ட வாரியாக ஆராய்ந்து செயல்பாட்டை முன்னெடுக்கும் அரசாக தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.