மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுமண தம்பதி வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுமணத் தம்பதி வீட்டில் 12 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பூரிக்குடிசை கிராமத்தில் திருட்டு நடைபெற்ற புதுமணத் தம்பதி வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீஸாா்.

Published On :23 அக்டோபர் 2026, 2:25 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுமணத் தம்பதி வீட்டில் 12 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், பூரிக்குடிசை கிராமத்தைச் சோ்ந்தவா் மெல்வின் (எ) அகஸ்டின் (28). இவரது மனைவி காா்த்திகா (26). இவா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினா் வீட்டின் அறையில் பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகள், 150 கிராம் வெள்ளிப்பொருள்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடுபோயிருந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விரல்ரேகை நிபுணா்கள், தடய அறிவியல் நிபுணா்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

நகைக் கடையில் திருட்டு முயற்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பொருவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் க.வெங்கடேசன் (50). இவா், மேல்சிறுவள்ளூா் கிராமத்தில் நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறாா்.

வழக்கம்போல, வெங்கடேசன் புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். வியாழக்கிழமை காலை கடையின் ஷெட்டரில் பூட்டு திறந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தொடா்ந்து, வெங்கடேசன் கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையில் இருந்த நகைகள், பணம் உள்ளிட்டவை பாதுகாப்புப் பெட்டகத்தில் அப்படியே இருந்தது தெரியவந்ததாம். இருப்பினும், கடையின் முன் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கருப்பு மை தடவி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டதுன், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.