தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பூட்டிய வீட்டில் பவுன் நகைகள் திருட்டு

அரகண்டநல்லூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் பவுன் நகைகள், ரொக்கம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :29 அக்டோபர் 2026, 7:07 am IST

அரகண்டநல்லூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் பவுன் நகைகள், ரொக்கம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரண்டநல்லூரை அடுத்த மனம்பூண்டி, பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் க.ராஜேந்திரன்(39). இவா் கடந்த 21-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் நெய்வேலிக்குச் சென்றுள்ளாா். தொடா்ந்து, புதன்கிழமை காலை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள், ரூ.1.55 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கதிஜாபீவி (62). இவா், புதன்கிழமை காலை வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா், கதிஜாபீவி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.