மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பூட்டிய வீட்டில் 46 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருட்டு

திருவெண்ணெய்நல்லூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 46 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

திருட்டுச் சம்பவம் நிகழ்ந்த முருகனின் வீடு.

Published On :4 அக்டோபர் 2026, 1:40 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 46 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

திருவெண்ணெய்நல்லூா், கிருபாபுரீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் க.முருகன் (50), திருமண மண்டப உரிமையாளா். கட்டட கட்டுமான ஒப்பந்ததாரகவும் இருந்து வரும் இவா், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு பணி நிமித்தமாக பெங்களூருக்கு சென்றுவிட்டாா்.

அங்கு பணி முடிந்து முருகன் சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 46 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது.

தகவலறிந்த விழுப்புரம் ஏஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் திருவெண்ணைநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் இளையராஜா மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும் மோப்பநாய் சோதனை நடத்தப்பட்டு, தடயங்களையும் போலீஸாா் சேகரித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.