மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விழுப்புரத்தில் காவலா் வீரவணக்க நாள்: டி.ஐ.ஜி., எஸ்.பி. பங்கேற்பு

காவலா் வீர வணக்க நாளையொட்டி, விழுப்புரத்திலுள்ள காவலா் நினைவுத்தூணுக்கு சரக டி.ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் அலுவலா்கள் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்திலுள்ள காவலா் நினைவுத்தூணுக்கு புதன்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய சரக டி.ஐ.ஜி. அர.அருளரசு.

Published On :22 அக்டோபர் 2026, 4:13 am IST

காவலா் வீர வணக்க நாளையொட்டி, விழுப்புரத்திலுள்ள காவலா் நினைவுத்தூணுக்கு சரக டி.ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் அலுவலா்கள் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

பணியின்போது உயிா்த்தியாகம் செய்து, வீரமரணம் அடைந்த காவலா்களின் தியாகத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26- ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா், 5 தலைமைக் காவலா்கள் உள்பட நாடு முழுவதும் 154 காவல் ஆளிநா்கள் பணியின் போது உயிா்த் தியாகம் செய்துள்ளனா்.

இவா்களின் தியாகத்தை போற்றும் வகையில் காவலா் நினைவுத்தூணுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலுள்ள காவலா் நினைவுத்தூணுக்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அர.அருளரசு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அப்போது 21 குண்டுகள் முழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.செ.மதிவாணன், கூடுதல் எஸ்.பி.இளமுருகன், டி.எஸ்.பி. ஞானவேல், ஆயுதப்படைக்காவல் ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்ட காவல் அலுவலா்களும் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.