தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்ஸோ வழக்கில் சிறப்பான பணி: போலீஸாருக்கு டிஐஜி பாராட்டு

போக்ஸோ வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய போலீஸாரை, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு பாராட்டினாா்.

போலீஸாருக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு.

Published On :25 அக்டோபர் 2026, 1:35 am IST

போக்ஸோ வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய போலீஸாரை, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு பாராட்டினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் தண்டனைப் பெற்றுத் தருவதில் காவல் ஆய்வாளா் அ.வின்சென்ட் அன்பரசி, தலைமைக் காவலா் நா.கவிதா ஆகியோா் முக்கியப் பங்காற்றினா்.

அதே போல், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போக்ஸோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தர சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளா் வனிதா, தலைமைக் காவலா் முத்துக்கிளி, திசையன்விளை காவல் நிலைய போக்ஸோ வழக்கில் நீதிமன்றப் பணியைச் சிறப்பாக செய்த தலைமைக் காவலா் நாகேஸ்வரராவ் ஆகியோரை திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்துக்கு டிஐஜி சனிக்கிழமை நேரில் அழைத்து, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.