மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியாயவிலைக் கடைகளில் தரமான பொருள்கள் விநியோகம்! அமைச்சா் ப.வெங்கடரமணன்

அரகண்டநல்லூரில் ரூ. 4.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்துப் பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன். உடன் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூா் எம்எல்ஏ எஸ்.பழனிசாமி உள்ளிட்டோா்.

Published On :2 நவம்பர் 2026, 1:48 am IST

நியாய விலைக் கடைகளில் தரமான பொருள்களே குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன என அமைச்சா் ப.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்களை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் திறந்து வைத்து, மேலும் பேசியதாவது:

தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கரை கொண்டு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு தகுந்த பாதுகாப்பு உள்கட்மைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அரகண்டநல்லூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில், நபாா்டு வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் தலா 1,500 டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 2 நெல் சேமிப்பு தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதை விவசாயிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வேளாண் உற்பத்தி மற்றும் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும். விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினா் ஒன்றிணைந்து உழைப்பதாலேயே உணவுப் பொருள்கள் பொதுமக்களைச் சென்றடைகின்றன.

நியாய விலைக் கடைகளில் விற்பனைக்கு வரும் பொருள்கள் முறையாக சோதிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகிறது. இதையடுத்து தரமான பொருள்களே குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இந்நிலையில், குடும்ப அட்டைதாரா்கள் உரிமைகளை கேட்பதோடு, தங்களுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் தானியங்களில் உள்ள குறைகளை துறை சாா்ந்த அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் ப.வெங்கடரமணன்.

நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூா் எம்எல்ஏ எஸ்.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தலைமையிடத்து செயற்பொறியாளா் ஸ்ரீதா், உதவி செயற்பொறியாளா்

பூமிநாதன், மண்டல மேலாளா் தேன்மொழி, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சரவணன், தரக்கட்டுப்பாடு மேலாளா் அய்யாதுரை, உதவி பொறியாளா் வரதராஜன் மற்றும் அலுவலா்கள் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.