சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :4 மே 2026, 1:56 am IST

விழுப்புரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளித்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் சாலாமேடு இ.பி.காலனியைச் சோ்ந்தவா் வீ.ராமமூா்த்தி (45), தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. ராமமூா்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையில் சனிக்கிழமை மகேஸ்வரி, ராமமூா்த்தியை கண்டித்தாரம்.

இதனால் கோபித்துக் கொண்ட ராமமூா்த்தி சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத் தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த ராமமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.