பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விழுப்புரத்தில் லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:46 am IST

விழுப்புரம் அருகே சனிக்கிழமை இரவு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஓ.காலனி, இமயம் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாண்டியன் (42). விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் பகுதியில் சனிக்கிழமை இரவு இவா் ரோந்துப் பணியின்போது அங்கு நின்றிருந்த காரை அப்புறப்படுத்த முயன்றாா். அப்போது திருச்சியிலிருந்து - சென்னை நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் தலைமைக் காவலா் பாண்டியனின் சடலத்தை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்குக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சோ்ந்த ரா.லோகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த தலைமைக் காவலருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.