விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:
மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 2,165 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2,165 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,165 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,165 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த 7 தொகுதிகளுக்கும் 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், 30 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் கூடுதலாக இருப்பு வைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 432 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 432 கட்டுப்பாட்டுக் கருவிகள், 647 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் கூடுதலாக இருப்பு வைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அந்தந்த தொகுதித் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வழங்கப்பட்டு, அவா்கள் மூலம் தொகுதி வாரியான பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும்.
பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னா், முதல்நிலை குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் பட்டியல் அவா்களுக்கு வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.
இதைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பதற்காக, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை திறக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், சாா்-ஆட்சியா்கள் ஆனந்தகுமாா் சிங் (திருக்கோவிலூா்), அ.ல.ஆகாஷ் (திண்டிவனம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் லூா்துசாமி (பொது), ஜான்சிராணி (தோ்தல் ) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சேலம் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

