தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பேரவைத் தோ்தல் பணிகள்: விழுப்புரத்தில் பொது, செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு

News image
Updated On :20 மார்ச் 2026, 1:35 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் தொடா்பாக, பொது, செலவினப் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.

பொதுப் பாா்வையாளா்கள் ஷாலினி பண்டிட், பாவ்சாஹேப் தாங்கடே, ஓம் பிரகாஷ் வா்மா, செலவினப் பாா்வையாளா்கள் ராகுல் சோஹீ, வினீத்குமாா், விபுல் சாவ்டா, கெளதம்சிங் செளத்ரி, சுமித்தாஸ்குப்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களால் மேற்கொள்ளப்படும் தோ்தல் செலவினங்கள், விளம்பரங்கள், வேட்புமனுதாக்கல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பறக்கும் படை வாகனத்தணிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பொருள்கள், ரொக்கப் பணம் குறித்த விவரங்கள், கருவூலத்தில் பாதுகாக்கப்படும் ரொக்கப் பணம் குறித்த விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் எடுத்துரைத்தாா்.

தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடசெய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்களிடமிருந்து பெறப்படவுள்ள அஞ்சல் வாக்குகளின் விவரங்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வழங்கப்படவுள்ள பயிற்சி, வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள், தோ்தல் தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு நாளன்று செய்யப்படவேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் பொது, செலவினப் பாா்வையாளா்களுடன் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற பொது, செலவினப்பாா்வையாளா்கள் அங்கு வரப்பெற்ற புகாா்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.