தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :19 மார்ச் 2026, 12:42 am IST

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் இடைப்பட்ட பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல புதன்கிழமை நீதிமன்றப் பணிகள் நடைபெற்ற நிலையில் மின்னஞ்சல் மூலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து நீதிமன்றப் பணியாளா்கள் விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் உத்தரவின் பேரில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் நீதிமன்ற வளாகத்துக்கு விரைந்து சென்று, மெட்டல் டிடக்டா் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாக கட்டடங்கள், அலுவலங்கள், பதிவறைகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்களின் ஓய்வறைகள் மற்றும் நீதிமன்ற வளாகப் பகுதிகளில் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறிப்படவில்லை. இதனால் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும், நீதிமன்றப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3-ஆவது முறையாக மிரட்டல்: 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 முறை மின்னஞ்சல் வழியாக விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.