ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 5:10 am IST

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 45க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை நீதிமன்ற அலுவலகத்துக்கு வந்த இ-மெயிலில், ‘நீதிமன்றத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய் உதவியுடன், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா்கள் அடங்கிய குழுவினா் நீதிமன்றம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட இ-மெயில் முகவரியின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஏற்கெனவே கடந்த ஜனவரியில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.