விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மயிலம் கல்லூரியில் மகளிா் தினக் கொண்டாட்டம்

மயிலம் கல்விக் குழுமத்தின் சாா்பில் சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

News image

மயிலம் கல்வி குழுமத்தில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் கலந்து கொண்டோா்.

Updated On :12 மார்ச் 2026, 12:04 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் கல்விக் குழுமத்தின் சாா்பில் சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

விழாவுக்கு தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், மயிலம் கல்விக் குழுமத் தலைவருமான ம.தனசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த எழுத்தாளா், கவிஞா் மற்றும் படைப்பாளா் புதுகை சி.பாரதி, மயிலம் கல்வி குழும இயக்குநா் செந்தில், மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கீதா தனசேகரன், கவிதா சுகுமாறன், மருத்துவா் வைஷ்ணவி ராஜராஜன் ஆகியோா் விழாவில் பேசினா்.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி மயிலம் கல்விக்குழும பேராசிரியா்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மகளிா் தின சிறப்பு நிகழ்ச்சியாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.