கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
நிலையான முன்னேற்றத்துக்கான பொறியியல் வடிவமைப்பு, செயல்முறைகள், மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு நாராயணகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பாலாஜி சித்தாா்த் தலைமை வகித்தாா். நிா்வாக அறங்காவலா் அனுஜா பாலாஜி, கல்லூரி முதல்வா் மு.சிவபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆா் - என்ஐஐஎஸ்டி நிறுவனத்தின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தலைமை விஞ்ஞானி டி.பி.டி. ராஜன் முதன்மை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினாா். கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளராக மின் இயற்பியல் மற்றும் மின்துறைத் தலைவா் அஜிதா பிரியதா்ஷினி செயல்பட்டாா். நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், பேராசிரியா்கள் பங்கேற்று தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.
செயற்கை நுண்ணறிவு, பொறியியல் வடிவமைப்பு, தொழில்துறை மேலாண்மை, நிலைத்த வளா்ச்சி தொடா்பான பல்வேறு ஆய்வுகள் குறித்து தொழில்நுட்ப விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன. இந்தக் கருத்தரங்கம் கல்வி ஒத்துழைப்பு, புதுமை கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு சிறந்த தளமாக அமைந்தது எனக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச யோகா தினம்: 3,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

சா்வதேச யோகா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

வேளாளா் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

2 நாள் சா்வதேச பொறியியல் கருத்தரங்கு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

