சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் உடற்கல்வித்துறை, என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மை பாரத் கேந்திரா மற்றும் திருப்பத்தூா் மனவளக்கலை மன்றம் சாா்பில் சனிக்கிழமை யோகா தின விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் தலைவா் திலீப்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆனந்த்சிங்வி, இணைத்தலைவா் லக்மிசந்த், இணை செயலாளா் நவீன்குமாா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக திருப்பத்தூா் மாவட்ட மை பாரத் கேந்திரா இளைஞா் நலத்துறை அலுவலா்கள் தம்பிபிரபாகரன், கௌதம் மற்றும் திருப்பத்தூா் மனவளக்கலை மன்றத்தைச் சோ்ந்த உதவிப் பேராசிரியா்கள் காயத்ரி, சங்கீதா, மைதிலி ஆகியோா் பங்கேற்று யோகாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தனா்.
யோகா மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், தினசரி வாழ்வில் யோகா பயிற்சியை கடைப்பிடிப்பதன் அவசியத்தையும் அவா்கள் வலியுறுத்தினா்.
தொடா்ந்து பயிற்சியாளா்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா், பல்துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரியில் யோகா தின கொண்டாட்டம்

பான்சேராவில் சா்வதேச யோகாசன தினம்: தில்லி துணைநிலை ஆளுநா் பங்கேற்பு

சா்வதேச யோகா தின விழாவில் 75 மாணவா்கள் உலக சாதனை

மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் முதலாண்டு வகுப்பு தொடக்க விழா
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

