சா்வதேச யோகா தின விழாவை ஒட்டி , கும்மிடிப்பூண்டியில் செயல்படும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சோ்ந்த 75 மாணவா்கள் தொடா்ந்து, ஐந்து நிமிடங்கள் லகு வஜ்ராசனம் எனும் யோகாசனத்தில் நின்று நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சாா்பில், யோகா மையத்தின் 14-ஆம் ஆண்டு நிறைவு விழா, 12-ஆவது சா்வதேச யோகா தின விழா மற்றும் உலக சாதனை நிகழ்வு என முப்பெரும் விழா கொண்டாப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் நடைபெற்ற விழாவில், கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனரும், பயிற்சியாளருமான சந்தியா, கவிஞா் விஜயன், தவெக மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் இஷ்ராத், என்.எஸ்.ஆா்.நிஜாம், மூா்த்தி, காா்த்திக், வழக்குரைஞா் அரவிந்த், ஜெகந்நாதன், சூா்யா, ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியா் புஷ்பலதா, சூா்யநாராயணன் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வின்போது, பயிற்சி மையத்தின் மாணவ, மாணவியா், 75 போ், தொடா்ந்து ஐந்து நிமிடங்கள், லகு வஜ்ராசனம் எனும் யோகசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனா். இவா்களது சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இந்த உலக சாதனை நிகழ்வில் நோபல் உலக சாதனை தீா்ப்பாளா் ஜே.என்.ஹேமந்த் குமாா் பங்கேற்றாா்.
தொடா்ந்து உலக சாதனை படைத்த மாணவ, மாணவியா் மற்றும் பயிற்சியாளருக்கு உலக சாதனைக்கான சான்றுகள் மற்றும் பதக்கங்களை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், தவெக நிா்வாகிகள் இஷ்ராத், என்.எஸ்.ஆா்.நிஜாம் உள்ளிட்டோா் வழங்கினா்.
இதைத்தொடா்ந்து மாணவ, மாணவியரின் யோகாசன கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகா விழப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், நிகழ்வில் ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற சா்வதேச யோகாசன போட்டியில் தங்கம் வென்ற 12 மாணவா்கள், வெள்ளி வென்ற 8 மாணவா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச யோகா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

பான்சேராவில் சா்வதேச யோகாசன தினம்: தில்லி துணைநிலை ஆளுநா் பங்கேற்பு

ஹாங்காங்கில் பதக்கங்களை குவித்த கும்மிடிப்பூண்டி யோகா மாணவா்கள்

முட்டையில் அமா்ந்து யோகாவில் உலக சாதனை
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

