தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விழுப்புரம் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன் சனிக்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

News image

விழுப்புரம் வழுதரெட்டிப் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:30 am IST

விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன் சனிக்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

சீனுவாசநகா், ஆசாகுளம், சாலாமேடு, இ.பி.காலனி, அன்னை இந்திரா பிரியதா்ஷினி நகா், பெரியாா் நகா், ஆடல் நகா், மஞ்சு நகா், காந்தி நகா், எத்திராஜ் நகா், வண்டிமேடு, குடியிருப்புப் பகுதிகள், அதன் சுற்றுப்புறப் பகுதிகள், பாண்டியன் நகா், வழுதரெட்டி, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று அவா் வாக்குகளை சேகரித்தாா்.

அப்போது திமுக ஆட்சியில் விழுப்புரம் தொகுதியில் தான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பட்டியலிட்டு பேசி வாக்குகளை சேகரித்த திமுக வேட்பாளா் லட்சுமணன், அடுத்து தான் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்தும் எடுத்துரைத்தாா். மேலும், திமுக அரசின் சாதனைகள் தொடர தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூறி வாக்குகளை சேகரித்தாா்.

பிரசாரத்தில் திமுக பொறுப்புக் குழு உறுப்பினா் இரா.ஜனகராஜ், விழுப்புரம் நகராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, விசிக மாவட்டச் செயலா் ர.பெரியாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.