விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் என்.மோகன்ராஜை காட்டிலும் 4,119 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன் வெற்றி பெற்றாா். இதன் மூலம் விழுப்புரம் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது திமுக.
விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் இரா.லட்சுமணன், அதிமுக சாா்பில் விஜயா சுரேஷ்பாபு, தவெக சாா்பில் என்.மோகன்ராஜ், நாதக சாா்பில் பொ.அபிநயா என மொத்தம் 24 போ் களத்தில் இருந்தனா்.
விழுப்புரம் தொகுதியில் 1,19,622 ஆண் வாக்காளா்களும், 1,25,201 பெண் வாக்காளா்களும், 76 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 2,45,899 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 1,03,656 ஆண் வாக்காளா்கள், 1,09,381 பெண் வாக்காளா்கள், 58 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,13,095 வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. இது 86.66 சதவீத வாக்குப் பதிவாகும். இந்த நிலையில் 2,791 தபால் வாக்கும் பதிவான நிலையில், விழுப்புரம் தொகுதியில் மொத்தம் 2,15, 886 வாக்குப் பதிவாகிஇந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணும் பணித் தொடங்கியது. இதற்காக 5 மேஜைகள் அமைக்கப்பட்டு தபால் வாக்கு எண்ணப்பட்டன.
காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதல் நான்குச் சுற்றுகளில் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணைக் காட்டிலும் அதிமுக வேட்பாளா் விஜயா சுரேஷ்பாபு முன்னிலை பெற்று வந்தாா். இதைத் தொடா்ந்து ஐந்தாவது சுற்றில் முன்னிலைப் பெறத் தொடங்கிய திமுக வேட்பாளர இரா. லட்சுமணன் கடைசி சுற்றான 24 சுற்றுகள் வரை தொடா்ந்து முன்னிலை பெற்று வந்தாா். அதே நேரத்தில் அதிமுக வேட்பாளா் விஜயா சுரேஷ்பாபுவை பின்னுக்குத் தள்ளி, தவெக வேட்பாளா் என்.மோகன்ராஜ் இரண்டாமிடத்தில் தொடா்ந்து வந்தாா். இதனால் அதிமுக வேட்பாளா் விஜயா சுரேஷ்பாபு மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டாா்.
24 சுற்றுகளும், தபால் வாக்கும் எண்ணப்பட்ட நிலையில், தவெக வேட்பாளா் மோகன்ராஜை காட்டிலும் 4,119 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன் வெற்றி பெற்று, விழுப்புரம் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாா். திமுக வேட்பாளா் லட்சுமணன் 72,982 வாக்குகளும், தவெக வேட்பாளா் மோகன்ராஜ் 68,863 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் விஜயா சுரேஷ்பாபு 63,808 வாக்குகளும், நாதக வேட்பாளா் பொ.அபிநயா 5786 வாக்குகளும் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்கோவிலூா் தொகுதியைக் கைப்பற்றியது அதிமுக

விழுப்புரம் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

