விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயில் 52-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதி விநாயகருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னா் புது குளக்கரையிலிருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. மாலையில் ஆதி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
கன்னிக்குன்றிலிருந்து இருந்து தீக்கலயம் எடுத்து வந்து மாலை 6 மணி மாபெரும் லட்சதீபம் விளக்கு எற்றும் பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தீபம் ஏற்றி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இரவு சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் இந்திர விமானத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்

கொம்மடிக்கோட்டை கோயிலில் சித்திரைத் திருவிழா

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா

பரிமள ரெங்கநாதா் கோயிலில் லட்ச தீபத் திருவிழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

