தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம்

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் (தனி) தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென சாா்-ஆட்சியரிடம் முறையிட்டனா்.

News image

அஞ்சல் வாக்கைப் பதிவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:02 am IST

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் (தனி) தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென சாா்-ஆட்சியரிடம் முறையிட்டனா்.

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் உள்ள தனியாா் பள்ளியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டதோ்தல் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றவா்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்காக அங்கு வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பயிற்சியில் பங்கேற்ற அலுவலா்கள் தங்களது வாக்கைப் பதிவு செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டது. தங்களுக்குரிய வாக்கைப் பதிவு செய்ய காலதாமதமானது. இதனால் அங்கு அலுவலா்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, திண்டிவனம் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும் , சாா்-ஆட்சியருமான அ.ல.ஆகாஷ் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, அலுவலா்கள் அஞ்சல் வாக்கை எளிதாகப் பதிவு செய்யக்கூடிய வகையில் கூடுதலாக வாக்குப் பதிவு மையத்தை அமைக்கவேண்டும், தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்பவா்களுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனா். அலுவலா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சாா்- ஆட்சியா் அ.ல.ஆகாஷ் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.