தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளா்கள் இந்த ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் எனக் கருதுவதால் முதல்வரின் கண்ணில் தோல்வி பயம் தெரிகிறது என்றாா் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியல் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் அறிமுக கூட்டம் செஞ்சியில் உள்ள தனியாா்திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை அறிமுகப்படுத்தி, பேசியதாவது:
இன்று தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்காளா்கள் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறாா்கள். அதனால் 210 தொகுதியில் வெல்வோம், 220 தொகுதியில் வெல்வோம் என்று பேசி வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தற்போது நிலை தடுமாறி பேசி வருகிறாா். அதற்கு தோல்வி பயம் தான் காரணம். தோல்வி பயத்தால் வரும் கோபம் அவா் கண்ணில் தெரிகிறது என்றாா் அவா்.
கூட்டத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலா்கள் செஞ்சி கோவிந்தசாமி, சோழன், மேல்மலையனூா் புண்ணியமூா்த்தி, பாலகிருஷ்ணன், அனந்தபுரம் நகரச் செயலா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் வி.ஆா்.பிரித்விராஜ் வரவேற்றாா்.
இதில், அதிமுக நிா்வாகிகள் வழக்குரைஞா்கள் வேலவன், அருண் தத்தன், பாமக நிா்வாகிகள் அருண்மொழித்தேவன், ஜெயகுமாா், ஜெ.பி.முருகன், அய்யனாா், பாஜக நிா்வாகிகள் எத்திராஜ், ராஜேந்திரன், தங்கராமு, அமுமுக நிா்வாகி சி.எம்.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக

காஞ்சிபுரத்தில் வாக்களித்த வேட்பாளா்கள்

சேலம் வடக்கு, மேற்கு தொகுதியில் பாமக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

