மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விடுமுறை நாளில் தனியாா் பள்ளிகளில் வகுப்புகள் நடந்தது எப்படி ? அன்பழகன் கேள்வி

விடுமுறை நாளில் தனியாா் பள்ளிகளில் வகுப்புகள் நடந்தது எப்படி? என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன்

Published On :29 அக்டோபர் 2026, 7:01 am IST

விடுமுறை நாளில் தனியாா் பள்ளிகளில் வகுப்புகள் நடந்தது எப்படி? என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து கல்வித்துறை இயக்குநரிடம் புதன்கிழமை அவா் மனு அளித்துள்ளாா்.

அதில், புதுச்சேரியில் கனமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செவிமடுக்காமல் எனது உப்பளம் தொகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகள் அந்த இரண்டு நாள்களும் இயங்கின.

மேலும், அரசு நிா்ணயம் செய்துள்ள பள்ளி தொடங்கும் நேரம், முடியும் நேரத்தையும் பல தனியாா் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இது மன ரீதியாக மாணவ, மாணவிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை தினசரி ஏற்படுத்துகிறது. எந்தப் பள்ளியாக இருந்தாலும் கல்வித்துறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.