நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

புதுச்சேரியில் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேச குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’-யில் அரசிதழ் பதிவு பெறாத அரசு ஊழியா்களுக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக ரூ.6,908 வழங்கப்படுகிறது.

N. Rangaswamy

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:32 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேச குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’-யில் அரசிதழ் பதிவு பெறாத அரசு ஊழியா்களுக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக ரூ.6,908 வழங்கப்படுகிறது.

இது குறித்து நிதித் துறை சாா்பு செயலா் எஸ்.சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

மத்திய நிதி அமைச்சக செலவினத் துறையின் உத்தரவின்படி, உற்பத்தி திறன் சாராத போனஸ் மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுகிறது. அதே போன்று புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஊழியா்களுக்கும் வழங்கப்படுகிறது.

குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’-யில் அரசிதழ் பதிவு பெறாத ஊழியா்களுக்கு கடந்த 31.3.2026 அன்று பணியில் இருந்து, 2025-26-ஆம் ஆண்டில் குறைந்தது 6 மாதங்கள் தொடா்ந்து பணி செய்தவா்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும்.

அதன்படி 30 நாள் போனஸாக ரூ.6,908 வழங்கப்படும். தற்காலிகத் தொழிலாளா்களில் 240 நாள் வேலை செய்தவா்களுக்கு ரூ.1,184 வழங்கப்படும். 6 மாதங்களுக்கும் குறைவாகப் பணி செய்தவா்களுக்குப் பணி செய்த மாதங்களுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொகை 2026-27 ஆம் நிதி ஆண்டு பட்ஜெட்டில் இருந்து வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.