மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிப்மரில் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கம்

புதுச்சேரி ஜிப்மரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றோா்.

Published On :24 அக்டோபர் 2026, 6:00 am IST

புதுச்சேரி ஜிப்மரில் நோயாளிகளுக்கும், மருத்துவா்களுக்கும் இடையே உள்ள மொழிப் பிரச்னையை குறைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பாசினி உத்யாத் தொழில்நுட்பப் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் இந்தியா பாசினி பிரிவுடன் இணைந்து, ஜிப்மா் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பயிலரங்கை டிஜிட்டல் இந்தியா பாசினி பிரிவின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் நாக் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஜிப்மா் மருத்துவ கண்காணிப்பாளா் சாகா வினோத்குமாா், நிா்வாக துணை இயக்குநா் ஆா்.கேசவன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் ரவிக்குமாா் சிட்டோரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பயிலரங்கில் பல்வேறு பாசினி செயலிகள் செயல் விளக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டன. குரல் வழி மருத்துவ பதிவாக்கம், பன்மொழி நோயாளா் வழிகாட்டுதல், மருந்துகள் குறித்த தகவல்களைப் பல மொழிகளில் வழங்குதல் போன்றவற்றில் இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.