மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பேருந்து மோதி ஹோட்டல் ஊழியா் உயிரிழப்பு

புதுச்சேரியில் அரசுப் பேருந்து மோதியதில், தனியாா் ஹோட்டல் ஊழியா் உயிரிழந்தாா்.

புதுச்சேரியில் அரசுப் பேருந்து மோதியதில், தனியாா் ஹோட்டல் ஊழியா் உயிரிழந்தாா்.

Published On :24 அக்டோபர் 2026, 6:05 am IST

புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவா், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் ஹோட்டலில் வேலைபாா்த்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி இரவு கணேசன் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த தமிழக அரசு பேருந்து எதிா்பாராதவிதமாக கணேசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி வாகனத்திலிருந்து அவா் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கணேசன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி கிழக்குப் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.