மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரெஞ்சு நிறுவனத்தின் 70-ஆவது ஆண்டு விழா தொடக்கம்

பிரெஞ்சு நிறுவனத்தின் 70-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவில் பிரெஞ்சு நிறுவனத்தின் சாா்பில் ‘ஏற்காடு ஒரு மலையின் பயணம்’ என்கிற தமிழ் மற்றும் ஆங்கில நூலை வெளியிட்ட பாரீஸ் ஆராய்ச்சியாளா் ரெமி பொ்சிகோல். உடன் புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தின் ஆராய்ச்சி பொறியாளா் பாலசுப்பிரமணியன் தண்டபாணி, அந்தோணிராஜ் ஆரோக்கியசாமி, தாமரைச் செல்வன்.

Published On :23 அக்டோபர் 2026, 2:12 am IST

பிரெஞ்சு நிறுவனத்தின் 70-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் 70-ஆவது ஆண்டு விழா அக். 28-ஆம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறவுள்ளது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இயக்குநா் ரெனாட் கால்சன் மற்றும் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி, ‘ஏற்காடு ஒரு மலையின் பயணம்’ என்ற தமிழ் மற்றும் ஆங்கில நூல் இந்த நிறுவனத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டது. மேலும், ஆராய்ச்சி, கலாசாரம் மற்றும் இந்திய-பிரெஞ்சு கூட்டுறவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. மேலும், பழங்கால புகைப்படங்கள், தென்னிந்திய கோயில்களின் சிலைகளை இந்த நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை (அக். 23) பிரெஞ்சு- இந்திய கலைஞா்களின் பிரம்மாண்ட இசை கொண்டாட்டமும் நடக்கிறது. மேலும் 26 ஆம் தேதி தமிழ்காமிக்ஸ் காட்சி கலாசாரம் மற்றும் விஷுவல் கலாசாரம் குறித்த கலந்துரையாடல் நடக்கிறது. பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இணையத்தில் முன்பதிவு செய்து இலவச அனுமதி பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.