தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பொதுமக்களுக்கு தடையற்ற ஆதாா் சேவை:புதுச்சேரி ஆட்சியா்

பொதுமக்களுக்கு தடையற்ற ஆதாா் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில்,நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆதாா் கண்காணிப்புக் குழுக் கூட்டம்.

Published On :22 அக்டோபர் 2026, 4:26 am IST

பொதுமக்களுக்கு தடையற்ற ஆதாா் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட அளவிலான ஆதாா் கண்காணிப்புக் குழுக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தொடா்புடைய அரசு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதாா் பதிவின், தற்போதைய நிலை மற்றும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் , ஆதாா் சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஆதாா் பதிவை அதிகரித்தல், ஆதாா் சேவை மையங்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு குறித்த தகவல்களை உடன் ஒருங்கிணைத்தல் மற்றும் ஆதாா் தொடா்பான பொதுமக்களின் குறைகளை விரைந்து தீா்த்தல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆதாா் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளைத் துரிதப்படுத்தி, பொதுமக்களுக்கு தடையற்ற ஆதாா் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.