தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தென்காசி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்

தென்காசி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்.

Published On :28 அக்டோபர் 2026, 2:16 am IST

தென்காசி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கண்காணிப்புக் குழுத் தலைவா் ராணிஸ்ரீகுமாா் எம்.பி. தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் வளா்ச்சியடைந்த பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பாராளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், 15 ஆவது நிதிக்குழு மானியம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்,

தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூா், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளில் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் அமைப்பது குறித்தும் , மேலும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

அந்தியோதயா அன்னயோஜனா திட்டம், உஜ்வான் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், மாவட்ட முன்னோடி வங்கியின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மாவட்ட திறன் பயிற்சி சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், எம்எல்ஏக்கள் கலைகதிரவன், ஈ. ராஜா, தி.மு. ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. அசோக்குமாா் , மாவட்ட வன அலுவலா் ரா. ராஜ்மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் மா. வீராசாமி , மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) திட்ட இயக்குநா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.