கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரியலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன். உடன் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் உள்ளிட்டோா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:15 am IST

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமை வகித்து, வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் தெரிவிக்கையில், அரியலூா் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுவதுமாக கொண்டு சோ்க்கும் வகையில் அனைத்துத் துறை அலுவலா்களும் தொடா்ந்து சிறப்பாக செயல்படுவதுடன், அத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக அனைத்துத் துறை அலுவலா்களும் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தாமரை எஸ்.ராஜேந்திரன் (அரியலூா்), க.வைத்திலிங்கம் (ஜெயங்கொண்டம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.