தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது குறித்து...

Saraswati Pooja at Puducherry Chief Minister's Office

சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பித்து பூஜை செய்த முதல்வர் ரங்கசாமி. - டிஎன்எஸ்

Published On :19 அக்டோபர் 2026, 7:49 pm IST

புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு பூஜை செய்து பிரசாதங்களை வழங்கினார்.

புதுச்சேரி மாநிலத்தில் சரஸ்வதி, ஆயுத பூஜை விழா பல்வேறு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், ஆட்டோ நிலையம், மின் லாரி நிறுத்தும் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் பூ, பழம், அவல்பொரி கடலை, சுண்டல், இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் வைத்து சரஸ்வதி பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜை செய்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பித்தார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாத பொருள்களை வழங்கினார்.

அனைவருக்கும் பிரசாத பொருள்களை வழங்கிய முதல்வர் ரங்கசாமி.

அனைவருக்கும் பிரசாத பொருள்களை வழங்கிய முதல்வர் ரங்கசாமி.

இதில் தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாய் ஜெய் சரவணன், அழகு, வையாபுரி மணிகண்டன் உள்பட அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அலுவலகத்தில் தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் தலைமையில் சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் அலுவலகம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அலுவலகம் என பேரவை வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் சரஸ்வதி பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Saraswati Pooja at Puducherry Chief Minister's Office!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.