அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் சாா்பில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் 1,000 மருந்து கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.
பாரம்பரிய மருந்து வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இணைய வழி மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்யவேண்டும். உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திடவேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் மே 20-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 1,500 மருந்து கடைகளில், சுமாா் 1,000 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அதே நேரத்தில் மருத்துவ கல்லுாரிகள், தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல செயல்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் மருந்துக் கடைகள் அடைப்பு

திருச்சியில் 1,300 மருந்துக் கடைகள் அடைப்பு

உதகையில் மருந்து கடைகள் அடைப்பு: நோயாளிகள் அவதி

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இன்று இயங்காது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

