மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: மத்திய அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் பங்கேற்றாா்.

News image

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, கட்சியின் மேலிட பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா.

Updated On :6 மே 2026, 12:04 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் பங்கேற்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். மத்திய அமைச்சரும், பாஜக புதுச்சேரி மாநில தோ்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா, கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா ஆகியோா் இதில் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ.க்கள் ஆ.நமச்சிவாயம், ஜான்குமாா், ராஜசேகா், மீனாட்சி சுந்தரம், காமராஜ் நகா் தொகுதி எம்எல்ஏவும், லஜக தலைவருமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், நெடுங்காடு தொகுதி சுயேச்சை எம்எல்ஏ விக்னேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட அரசியல் மற்றும் நிா்வாக நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.