தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம்

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன்.

Updated On :27 மார்ச் 2026, 4:03 am IST

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற வருபவா்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு தகவல்கள் அச்சிட்ட சீட்டுகள் வழங்கப்பட்டன.

அதில் 100சதவீத வாக்குப் பதிவு மற்றும் கண்ணியமான வாக்குப்பதிவு பற்றிய கருத்துகள் அடங்கியுள்ளன. நோயாளிக்கு வழங்கப்படும் இந்த மருத்துவச் சீட்டினை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டாா்.

இக் கல்லூரி இயக்குநா் மருத்துவா் உதயசங்கா், துணை மாவட்ட தோ்தல் அதிகாரி கண்ணபிரான் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.