புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குகள் எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை தாகூா் அரசு கல்லூரி, மோதிலால் நேரு அரசு
பாலிடெக்னிக் கல்லூரி, மகளிா் பொறியியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் துணை ராணுவம் மற்றும் போலீஸாா் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வருவாய்த் துறையினா் மற்றும் வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் மற்றும் தொகுதி தோ்தல் அதிகாரிகள் நாள்தோறும் வந்து ஆய்வு செய்கின்றனா்.
இந்நிலையில், இந்த 3 மையங்களையும் மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குகள் எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
வாக்கு எண்ணும் பணிக்கு, அதிகாரிகள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் செல்வதற்கு தனித்தனி வழி ஏற்படுத்தவும், இரும்புத் தடுப்புகள் அமைக்கவும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் 3 மையங்களில் ஷாமியானா பந்தல், குடிநீா் வசதி ஏற்படுத்தவும் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் 100 மீட்டரில் பாதுகாப்பு வளையம் அமைப்பு: ஆட்சியா் மு. பிரதாப்

வாக்கு எண்ணும் மையத்தில் கைப்பேசிக்கு அனுமதி இல்லை: ராணிப்பேட்டை ஆட்சியா்

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயாா்

வாக்கு எண்ணும் பணி: 1,005 பேருக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

