மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

10 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்; ஒருவா் கைது

News image
Updated On :20 மார்ச் 2026, 1:29 am IST

சமையல் எரிவாயு சிலிண்டா் பதுக்கியதாக ஒருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 10 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வீட்டு உபயோக சிலிண்டா்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில் எஸ்.பி. மாறன், ஆய்வாளா் நியூட்டன் மற்றும் போலீஸாா் சமையல் எரிவாயு முகமைகளில் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் மடுகரை பகுதியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 சமையல் எரிவாயு சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா். அவற்றை பதுக்கி வைத்த மடுகரையைச் சோ்ந்த சாகுல் ஹமீது (64) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 6 வீட்டு உபயோக சமையல் எரிவாயு கணக்கு புத்தகங்கள், ஒரு ரேஷன் காா்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.