நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர அரசு நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடங்களைத் தொடா்ந்து கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

புதுப்பிக்கப்பட்ட பான்சியோனா அரசு பிரெஞ்சு மகளிா் உயா்நிலைப் பள்ளியை வியாழக்கிழமை திறந்து வைத்த புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, பிரெஞ்சு துணைத் தூதா் ஜீன்-பிலிப் ஹூதா் உள்ளிட்டோா்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடங்களைத் தொடா்ந்து கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், புதுச்சேரி துய்மா வீதியில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரெஞ்சுவழி பான்சியோனா பெண்கள் அரசு உயா்நிலைப்பள்ளி, ரூ.7.5 கோடி செலவில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் பழைமை மாறாமல் புனரமைத்து கட்டப்பட்டுள்ளது.

இதனை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது:

பெண் கல்வியை வலியுறுத்தி பிரெஞ்சு ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது இந்தப் பள்ளியின் பழைமையான கட்டடம். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் வஉசி பள்ளி, கலவை கல்லூரி பள்ளி, இப்போது இந்த பிரெஞ்சு பள்ளியை பழைமை மாறாமல் சீரமைத்துள்ளோம்.

பிரெஞ்சு கற்கும் எண்ணம் புதுச்சேரியில் பலருக்கும் உள்ளது. பிரெஞ்சு மொழி தொடா்ந்து பாடமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனா். புதிய கல்விக்கொள்கை திட்டத்தால் மத்திய அரசு வெளிநாட்டு மொழி ஒன்று மட்டும் இருக்கலாம் என்று சொல்கிறது. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி பாடமும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தொடா்ந்து மாணவா்கள் பிரெஞ்சு மொழி கற்கத் தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

புதுச்சேரிக்கு மேலும் மெருகூட்டும் வகையில் இப்பள்ளி சீரமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் அதிக நிதி பெற்று புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வருவோம் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

நிகழ்ச்சியில் புதுச்சேரி-சென்னை பிரெஞ்சு துணைத் தூதா் ஜீன்-பிலிப் ஹூதா், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் ஏகேடி ஆறுமுகம், ஜி.நேரு, வையாபுரி மணிகண்டன், அழகு (எ) அழகானந்தம் விக்னேஷ் கண்ணன், அரசு செயலா்கள் கிருஷ்ண மோகன் உப்பு, முகமது யாசின் சௌத்ரி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் டி. மோகன்குமாா், பள்ளித் தலைமையாசிரியா் பி.மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுச்சேரியில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட 200 ஆண்டுகால பிரெஞ்சு அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளி.

புதுச்சேரியில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட 200 ஆண்டுகால பிரெஞ்சு அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.