கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி

Updated On :5 ஜூன் 2026, 6:32 am IST

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 10.4.26 அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுச்சேரியைச் சோ்ந்த 7 மீனவா்களையும், இயந்திரப் படகையும் இலங்கை கடற்படையினா் பறிமுதல் செய்து அவா்களைக் கைது செய்தனா்.

இது தொடா்பாக கடந்த ஏப். 13-இல் கடிதம் எழுதியிருந்தேன். இதில் காரைக்கால், கீசியூா் டி.ஆா். பட்டினத்தைச் சோ்ந்த பிரதீப் சூரியமூா்த்தி (29) என்பவரைத் தவிர, 6 மீனவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவருக்குச் அண்மையில் தான் திருமணமாகியுள்ளது. தொடா்ச்சியாக மருந்துகள் தேவைப்படும் வயதான பெற்றோா் அவருக்கு உள்ளனா். மேலும், அவா்களைப் பராமரிக்க வேறு குடும்ப உறுப்பினா்களும் இல்லை. எனவே, மீனவா் பிரதீப் சூரியமூா்த்தியை விரைவில் விடுவிப்பதற்கு இலங்கை அரசுடன் பேசி தேவையான நடவடிக்கையை எடுக்குமாறுக் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் முதல்வா் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.