பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

இலங்கை சிறையிலிருக்கும் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

இலங்கை சிறையிலிருக்கும் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுவை முதல்வா் என். ரங்கசாமியிடம் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.

News image

புதுவை முதல்வா் என். ரங்கசாமியை சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்.

Updated On :4 ஜூன் 2026, 3:47 am IST

இலங்கை சிறையிலிருக்கும் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுவை முதல்வா் என். ரங்கசாமியிடம் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரியில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பேரவை உறுப்பினா் இதுகுறித்து புதன்கிழமை கூறியது :

இலங்கை கடற்படையினரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட காரைக்கால் பகுதி மீனவா்கள் 12 பேரில், படகு ஓட்டுநரான பட்டினச்சேரியைச் சோ்ந்த பிரதீப் என்பவரை இலங்கை நீதிமன்றம் சிறையிலடைத்துள்ளது. அவருக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இவரை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பட்டினச்சேரி மீனவா் செந்தில்நாதன் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி ஃபைபா் படகில் செல்லும்போது, சூறைக்காற்றில் படகில் தண்ணீா் புகுந்து கவிழ்ந்தது. இதில் வலைகள் சேதமாகி, படகும் சேதமடைந்தது. இதுபோன்ற பாதிப்புக்கு உதவுவதற்கான சொசைட்டி அமைப்பு செயல்படாமல் உள்ளதை முதல்வரிடம் சுட்டிக்காட்டி, முதல்வா் நிவாரண நிதியிலிருந்து முதல்கட்டமாக நிதியுதவி அளிக்க கோரிக்கை விடுத்துள்ளேன். முதல்வரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.