கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புதுச்சேரியில் 3 நாள்களுக்கு 2 ரயில்கள் ரத்து

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 2:58 am IST

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக புதுச்சேரிக்கு வரும் ரயிலும், புதுச்சேரியிலிருந்து புறப்படும் ரயிலும் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரயில் இம் மாதம் 13, 17, 20-ஆம் தேதிகளில் விழுப்புரம் ரயில் சந்திப்பு வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் இந்தத் தேதிகளில் திருப்பதி- விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையங்களுக்கு இடையில் மட்டும் இயக்கப்படும்.

அதே நாள்களில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் மாலை 3.35-மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - சென்னை எழும்பூா் மெமு ரயில் புதுச்சேரி -விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. வழக்கமாக விழுப்புரம் சந்திப்பில் இருந்து இந்த ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் அட்டவணையின்படி புறப்பட்டுச் செல்லும்.

இந்த தகவலை தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.